Ad Banner
Ad Banner
 விளையாட்டு

2025/2026 மலேசியக் கிண்ண அரையிறுதி போட்டி; ஜே.டி.தி முன்னிலை

04/04/2026 06:13 PM

செராஸ், 04 ஏப்ரல் (பெர்னாமா) -- 2025/2026 மலேசியக் கிண்ண அரையிறுதி போட்டியில், நடப்பு வெற்றியாளரான ஜோகூரின் ஜே.டி.தி 4-0 என்ற கோல் கணக்கில் கோலாலம்பூர் சிட்டி எஃப்.சி அதிரடியாக வீழ்த்தியது.

நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில், வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம், அடுத்த வாரம் சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெறும் இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பை ஜே.டி.தி பிரகாசமாக்கிக் கொண்டது.

செராசில் உள்ள கோலாலம்பூர் காற்பந்து அரங்கில் இவ்வாட்டம் நடைபெற்றது.

ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்திள் இறக்குமதி ஆட்டக்காரரான பெர்க்சன் டா சில்வா வழி முதல் கோலை அடித்து தெற்கு ஹரிமாவ் அணி முன்னணி வகித்தது.

பின்னர், அதன் இரண்டாவது கோல் 31-வது நிமிடம் போடப்பட்டது.

இரண்டாம் பாதியிலும், ஜே.டி.தி ஆட்டத்தை அதிரடியாக தொடர்ந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு ஆட்டக்காரரான ஒஸ்கார் அரிபாஸ், 59-வது நிமிடம் மூன்றாவது கோலை அடித்தார்.

இதனிடையே, ஆட்டத்தின் 77-ஆவது நிமிடத்தில் ஜே.டி.தி-இன் நாச்சோ மெண்டெஸ் அடித்த நான்காவது கோலின் மூலம் கே.எல் சிட்டி அணியின் துயரம் மேலும் அதிகமானது.

எனினும், வி.ஏ.அர்-இன் வழி செய்யப்பட்ட மறு ஆய்வில் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.

ஆயினும், மற்றுமொரு கோலின் வழி, 4-0 என்ற நிலையில் போட்டி முடிவடைந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)