Ad Banner
Ad Banner
 பொது

காலஞ்சென்ற துன் லிங் லியோங் சிக்கிற்கு இன்று இறுதி அஞ்சலி

06/04/2026 05:12 PM

செராஸ், 06 ஏப்ரல் (பெர்னாமா) -- கடந்த சனிக்கிழமை காலமான முன்னாள் போக்குவரத்து அமைச்சரும், மலேசிய சீனர் சங்கம், ம.சீ.ச-வின் கௌரவ வாழ்நாள் தலைவருமான துன் டாக்டர் லிங் லியோங் சிக்கிற்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிற்பகல் மணி 12-க்கு தொடங்கிய இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.

ம.சீ.ச.வின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங், துணைத் தலைவர் டத்தோ டாக்டர் மா ஹாங் சூன், பொது செயலாளர் டத்தோ சோங் சின் வூன் மற்றும் உதவித் தலைவர்களான டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ  ஜெக் செங், டத்தோ லின் பான் ஹோங், டத்தோ லாரன்ஸ் லோ ஆ கியோங் மற்றும் டத்தோ டான் தெய்க் செங் ஆகியோர், இதில் கலந்து கொண்டார்

கட்சிக்கும் நாட்டிற்கும் அவர் ஆற்றிய சேவைகள் மற்றும் பங்களிப்புகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, துன் டாக்டர் லிங் லியோங் சிக் சவப்பெட்டி மீது ம.சீ.ச கொடி நாளை மாலை மணி 4-க்கு போர்த்தப்படும் என்று டாக்டர் வீ தெரிவித்தார்.

''துறைமுகத்தைக் கட்டுவதில் அவர் முக்கிய உந்து சக்தியாக இருந்தார். அவர் மேம்படுத்திய துறைமுகங்களில் ஒன்றான வெஸ்ட்போர்ட், இன்று உலகின் மிகவும் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது,'' என்றார் அவர்.

17 ஆண்டுகளாக ம.சீ.ச-வை வழிநடத்திய துன் லிங், போக்குவரத்து அமைச்சராக நீண்ட காலமாக பணியாற்றியர் என்றும், அதன் மூலம் நாட்டின் விரிவான உள்கட்டமைப்பு மேம்பாட்டைத் திட்டமிடுவதில் முக்கியப் பங்காற்றியவர் என்றும் டாக்டர் வீ புகழாரம் சூட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)