Ad Banner
Ad Banner
 பொது

வெற்றியடைந்துள்ள செயற்கை மழைப் பொழிவு நடவடிக்கை

08/04/2026 05:48 PM

கோலாலம்பூர், ஏப்ரல் 08 (பெர்னாமா) -- கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் மலேசியாவின் MYRAE மெட் அமைப்பிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இரண்டு மாநிலங்களில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு ஏற்பட்டிருப்பது, நேற்று மேற்கொள்ளப்பட்ட செயற்கை மழைப் பொழிவு நடவடிக்கை வெற்றியடைந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு, பெர்லிஸ் மற்றும் கெடாவில் 10 முதல் 57.4 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகி இருந்தது.

மழைநீர் சேகரிப்புப் பகுதிகளில் நிலவும் நீர் பற்றாக்குறைப் பிரச்சனைகளைக் களைவதற்கு, உகந்த வளிமண்டல நிலைகளின் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவது, மிகவும் பயனுள்ளது என்பதை இவ்வெற்றி உணர்த்துவதாக, இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில், துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலை மற்றும் மழையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள அணைக்கட்டு நீர் சேகரிப்புப் பகுதியில், மழைப்பொழிவு நடவடிக்கையை அதிகரிப்பதற்கான ஒரு தலையீட்டு நடவடிக்கையே இந்த முயற்சி என்று மத்திய பேரிடர் நிர்வாக செயற்குழுவின் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 6 முதல் 8-ஆம் தேதி வரை பேராக், கெடா, பெர்லிஸ் மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளை உட்படுத்திய, எச்சரிக்கை, முன்னறிவிப்பு மற்றும் அபாயகரமான நிலைகளில் உள்ள 11 முக்கிய அணைக்கட்டுகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

பேராக் மாநிலத்தில் உள்ள தெமெங்கோர் அணை மற்றும் புக்கிட் மேரா நீர்ப்பிடிப்புப் பகுதிகளைக் குறிவைத்து, இதே நடவடிக்கை இன்று தொடரும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)