நீலாய், ஏப்ரல் 08 (பெர்னாமா) -- மறைந்த முன்னாள் போக்குவரத்து அமைச்சரும், மலேசிய சீனர் சங்கம், ம.சீ.ச-வின் வாழ்நாள் தலைவருமான துன் டாக்டர் லிங் லியோங் சிக்கின் நல்லுடல் இன்று நீலாயில் உள்ள சியாவோ இன் நினைவுப் பூங்காவில் தகனம் செய்யப்பட்டது.
மதியம் மணி 12.18 அளவில் துன் டாக்டர் லிங் லியோங் சிக்கின் நல்லுடலை ஏற்றிச் சென்ற வேன் நினைவுப் பூங்காவை வந்தடைந்தது.
சுமார் ஒரு மணி நேரம் இறுதிச் சடங்கு நீடித்தது.
இதில் ம.சீ.ச-வின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் உட்பட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தினர்.
கடந்த சனிக்கிழமை டாக்டர் லிங் தமது 82-வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.
அவருக்கு தோ புவான் ஒங் ஈ நா என்ற மனைவியும் லிங் ஹீ லியோங் மற்றும் லிங் ஹீ கியாட் என்ற ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)