Ad Banner
Ad Banner
 விளையாட்டு

உலகக் கிண்ணம்; பிரேசிலை பிரதிநிதிக்க நெய்மாருக்கு வாய்ப்பு உண்டு

11/04/2026 05:28 PM

பிரேசிலியா, ஏப்ரல் 11 (பெர்னாமா) -- பிரேசில் காற்பந்து நட்சத்திரம் நெய்மாரின் உடல் நிலை குறித்து கவலைகள் எழுந்த நிலையில், 2026 ஃபிபா உலகக் கிண்ண காற்பந்து போட்டியில், தமது நாட்டை பிரதிநிதிக்க அவருக்கு இன்னும் வாய்ப்புள்ளதாக பிரேசில் அணியின் உதவிப் பயிற்சியாளர் டேவிட் அன்செலோட்டி தெரிவித்திருக்கிறார்.

128 அனைத்துலக போட்டிகளில் 79 கோல்கள் அடித்து, பிரேசில் காற்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக உள்ள நெய்மார்,

கடந்த டிசம்பரில் தனது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, இந்த ஆண்டு வெறும் ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உருகுவேக்கு எதிரான உலக கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தில் காயமடைந்ததால், அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக பிரேசில் அணியில் இடம் பெறவில்லை.

இருப்பினும், ஜூன் 11-ஆம் தேதி உலக கிண்ண போட்டி தொடங்குவதற்குள், 34 வயதான அவர் முழுமையாக குணமடைவதற்கு இன்னும் நேரம் உள்ளதாக டேவிட் அன்செலோட்டி கூறினார்.

இம்முறை உலகக் கிண்ணப் போட்டிக்காக பிரேசில் அணியில் இடம்பெறவுள்ள ஆட்டாக்காரர்களின் பெயர் பட்டியல் மே 18-ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

சி குழுவில் இடம்பெற்றுள்ள பிரேசில் அணி, ஜூன் 13-ஆம் தேதி மொராக்கோவை எதிர்த்து தனது உலகக் கிண்ண பயணத்தைத் தொடங்கவுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)