Ad Banner
Ad Banner
 உலகம்

10 அம்ச பரிந்துரைகள் பாகிஸ்தான் மூலம் முன்வைப்பு

08/04/2026 07:30 PM

இஸ்லாமபாத், ஏப்ரல் 08 (பெர்னாமா) -- அமெரிக்கா முன்வைத்த அனைத்துத் திட்டங்களையும் ஈரான் நிராகரித்து, தங்கள் தரப்பில் 10 அம்ச பரிந்துரைகளை, பாகிஸ்தான் மூலம் முன்வைத்துள்ளதாக
அதன் தேசிய பாதுகாப்பு உச்சமன்றம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஈரானின் 10 அம்ச முன்மொழிவு, ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கான இராணுவ ஒருங்கிணைப்பு, “axis of resistance” கூட்டணி உறுப்பினர்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துதல், அமெரிக்க படைகளை வட்டார தளங்களில் இருந்து வெளியேற்றுதல் மற்றும் பாதுகாப்பான கடல் போக்குவரத்து நடைமுறையை அமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

மேலும், போர்சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல், தடைகள் மற்றும் ஐ.நா. தீர்மானங்களை நீக்குதல், முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்தல், யுரேனியம் செறிவூட்டலை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் அனைத்து முனைகளிலும் போர்நிறுத்தம் அமல்படுத்துதல் என்பவையும் இதில் வலியுறுத்தப்படுகின்றன.

அவை அனைத்தும், கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு மன்றத் தீர்மானம் ஒன்றின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)