வாஷிங்டன் டி.சி, ஏப்ரல் 08 (பெர்னாமா) -- அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அதிபர் டோனால்ட் டிரம்ப் மீது 13 குற்றச்சாட்டுகளின் பேரில் பதவி நீக்கத் தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளனர்.
டிரம்ப, போரையும் படுகொலைகளையும் தொடங்கியதாகவும்,போர்க்
குற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பனாமா, கொலம்பியா, கியூபா மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளுக்கு எதிராக இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதாக டிரம்ப் அச்சுறுத்தியதுடன், ஈரான், ஏமன், லெபனான், சிரியா, நைஜீரியா காசாவிற்கு போன்ற நாடுகளுக்கு எதிராக அரசியலமைப்புக்கு முரணான முறையில் போர் நடவடிக்கைகளை ஆரம்பித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த முயற்சிகள் அனைத்திலும் அரசியலமைப்புச் சட்டத்தால் தேவைப்படும் நாடாளுமன்ற அங்கீகாரம் இல்லாமலேயே டிரம்ப் செயல்பட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)