Ad Banner
Ad Banner
 உலகம்

நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை

09/04/2026 04:24 PM

வாஷிங்டன் , ஏப்ரல் 09 (பெர்னாமா) -- அமெரிக்கா–ஈரான் போரில் தற்காலிக நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்று MarineTraffic தரவுகள் காட்டுகின்றன.

போர் நிறுத்தத்திற்குப் பிறகு சில கப்பல்கள் பயணத்தைத் தொடங்கியிருந்தாலும், மொத்த போக்குவரத்து இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு பற்றிய அச்சங்கள், காப்பீட்டு சிக்கல்கள், மற்றும் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலுக்காக கப்பல் உரிமையாளர்கள் காத்திருப்பு ஆகியவை 
இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

சில ஆரம்ப நகர்வுகள் இருந்தாலும், இது பரவலான மற்றும் வழக்கமான கடல் போக்குவரத்து மீள்ச்சியாக இன்னும் கருதப்படவில்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து இன்னும் மிகவும் மெதுவாகவும், எச்சரிக்கையுடனும் நடைபெற்று வருகிறது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் சுமார் ஐந்தில் ஒரு பகுதியும், மேலும் பல்வேறுபொருட்களும், இந்த நீர்வழியாகவே கடந்து கொண்டு செல்லப்படுகின்றன. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)