Ad Banner
Ad Banner
 பொது

மருத்துவ சாதன விநியோகிப்பு & விலை அதிகரிப்பை சமாளிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை

11/04/2026 03:13 PM

ஜோகூர் பாரு, ஏப்ரல் 11 (பெர்னாமா) -- உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தொடர்ந்து மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விநியோகப் பிரச்சனைகளையும் அதிகரித்து வரும் விலைகளையும் சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

மேலும், மாற்று ஆதாரங்களைக் கண்டறிவதும் அந்நடவடிக்கைகலில் அடங்கும் என்று பொருளாதார அமைச்சர்அக்மல் நஸ்ருல்லா முஹமட் நாசிர் தெரிவித்தார்.

எந்தவொரு பாதிப்புகளையும் தவிர்ப்பதற்கு, கையிருப்புகளை உறுதி செய்யவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.

மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் உட்பட பெரும்பாலான பொருள்கள், எரிபொருள் ஆற்றலை முதன்மையாக பயன்படுத்துவதால், அவற்றின் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பதாக அக்மல் நஸ்ருல்லா  கூறினார்.

"உதாரணத்திற்கு, முன்னதாக குறிப்பிட்டது போன்று, மருத்து சாதனங்களின் தயாரிப்பைப் பொறுத்தவரை, இதுவரை நாம் ரெசினை மட்டும் சார்ந்திருக்கிறோம். ஆனால் தற்போது ஏன் பாலிமரை பயன்படுத்த முயலக் கூடாது?," என்றார் அவர்.

இன்று ஜோகூர் பாரு தாமான் பெலாங்கி, இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அக்மல் நஸ்ருல்லா செய்தியாளர்களிடம் பேசினார்.

பாலிமர்கள் போன்ற பொருள்களைப் பயன்படுத்தும் மருத்துவ சாதனங்கள், நாட்டின் சுகாதாரத் துறையில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு அங்கீகாரம் அல்லது சான்றிதழைப் பெற வேண்டும் என்று அவர் விவரித்தார்.

 -- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)