Ad Banner
Ad Banner
 உலகம்

நிலவை ஆராய்ந்த நாசாவின் 4 விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்

11/04/2026 03:55 PM

ஃபுளோரிடா, ஏப்ரல் 11 (பெர்னாமா) -- ஈரான் - நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ் இரண்டு திட்டம் வெற்றியடைந்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம், நாசா தெரிவித்திருக்கிறது.

கடந்த 10 நாள்களாக, நிலவு குறித்து ஆய்வு மேற்கொண்ட நாசாவின் நான்கு விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியதாக நாசா கூறியது.

நிலவுக்குச் சென்ற நான்கு விண்வெளி வீரர்கள் பயணித்த ஓரியன் விண்கலம் 3 வான்குடைகள் உதவியுடன் பசிபிக் கடலில் இறங்கியது.

கடந்த ஏப்ரல் முதலாம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து Artemis இரண்டு விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

50 ஆண்டுகளில் மனிதர்களை நிலவுக்கு அருகே கொண்டு சென்ற முதல் விண்வெளிப் பயணமாகும் இதுவாகும் என்று நாசா தெரிவித்திருந்தது.

கடைசியாக 1972ம் ஆண்டு அப்போலோ 17 விண்கலம் மூலம் நிலவுக்கு நாசா மனிதனை அனுப்பியிருந்தது.

1972-க்குப் பிறகு நிலவுக்கு அருகே சென்ற முதல் மனிதப் பயணம் இதுவாகும்.

இந்த நான்கு விண்வெளி வீரர்களும் நிலவின் பின்புறத்தைக் கண்டதுடன், பூமியிலிருந்து அதிக தொலைவு பயணித்தவர்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)