Ad Banner
Ad Banner
 பொது

பெண்ணைத் தாக்கிய விசாரணைக்கு உதவ மூவர் கைது

12/04/2026 05:05 PM

கெடா, 12 ஏப்ரல் (பெர்னாமா) --  நேற்று மாலை கெடா, பண்டார் லகுனா மெர்போக்கில் தமது காரில் அமர்ந்து சமூக ஊடக நேரலையில் பேசிக் கொண்டிருந்த பெண் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவ மூன்று நபர்களைப் போலீசார் கைது செய்தனர்.

மாலை மணி சுமார் 5.02-க்கு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்புறத்தில் Toyota Vellfire ரக காரில் வந்த சந்தேக நபர் ஒருவரால் அப்பெண் தாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக, கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹன்யான் ரம்லான் கூறினார்.

நான்கு பேர் பயணித்த கார் ஒன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் காரை நெருங்கியதாகவும், அதில் ஒருவர் பாதிக்கப்பட்டவரின் முகம், தலை மற்றும் உடலில் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதாகவும், பெர்னாமா தொடர்புக் கொண்ட போது ஹன்யான் கூறினார்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 323 மற்றும் 427 ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ள 30 வயதுடைய ஆண் ஒருவரையும், 29 வயது பெண் ஒருவரையும் போலீஸ் கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணும் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 448-இன் அவர் மீது குற்றம் பதிவாகியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)