Ad Banner
Ad Banner
 உலகம்

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது

12/04/2026 05:27 PM

இஸ்லாமாபாத், 12 ஏப்ரல் (பெர்னாமா) --  அமெரிக்கா - ஈரான் இடையே 21 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

உலக நாடுகள் எதிர்பார்த்திருந்த இந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் தெரிவித்திருக்கிறார்.

பேச்சுவார்த்தைகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய ஜே.டி.வென்ஸ், அணு ஆயுதங்களை உருவாக்க கூடாது என்பது உள்ளிட்ட அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்துவிட்டதாகக் கூறினார்.

“ஈடுபட்டுள்ளோம், மேலும் ஈரானியர்களுடன் பல ஆழமான விவாதங்களை நடத்தியுள்ளோம், அதுதான் நல்ல செய்தி. கெட்ட செய்தி என்னவென்றால், நாங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை. இது அமெரிக்காவிற்கு ஒரு கெட்ட செய்தியாக இருப்பதை விட, ஈரானுக்குத்தான் மிகப் பெரிய கெட்ட செய்தி என்று நான் நினைக்கிறேன். எனவே, ஓர் உடன்பாட்டிற்கு வரவில்லை என்ற செய்தியுடன் அமெரிக்காவுக்குச் செல்கிறோம். எங்களின் சிவப்புக் கோடுகள் என்ன, எந்தெந்த விவகாரங்களில் நாங்கள் அவர்களுக்கு இணங்கத் தயாராக இருக்கிறோம், எந்தெந்த விவகாரங்களில் இணங்கத் தயாராக இல்லை என்பதை எங்களால் முடிந்தவரை மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம், ஆனால் அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டனர்”, என்றார் அவர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்காவும் ஈரானும் சந்தித்த மேற்கொண்ட முதல் சந்திப்பதாக இது அமைந்தது.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)