Ad Banner
Ad Banner
 விளையாட்டு

உடல் பருமன் பிரச்சனையைக் கையாள இலவச விளையாட்டு வகுப்புத் திட்டம்

12/04/2026 05:34 PM

புத்ராஜெயா, ஏப்ரல் 12 (பெர்னாமா) -- சிறார்கள் மத்தியில் உடல் பருமனை சமாளிக்கும் முயற்சியாக செபக் தக்ரோ உட்பட இலவச விளையாட்டு வகுப்புத் திட்டம் புத்ராஜெயாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறைந்த செலவில் இந்த வகுப்புகளில் கலந்து கொள்வதோடு, இந்த விளையாட்டுகளை வீட்டில் இருந்தே பயிற்சி பெறுவதை இத்திட்டம் எளிதாக்கும் என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்துள்ளார்.

மாதத்திற்கு இரு முறை அதாவது இரண்டாவது மற்றும் நான்காவது வாரத்தில், ஆண்டு முழுவதும் இந்த வகுப்புகள் நடைபெறும் என்று ஹன்னா யோ கூறினார்.

ஒவ்வொரு பிரிவிலும் 50 மாணவர்கள் புத்ராஜெயாவைச் சுற்றியுள்ள நான்கு வெவ்வேறு இடங்களுக்குச் செல்வார்கள் என்று அவர் கூறினார்.

"இதுதான் ஆரம்பம். சிறப்பு விளையாட்டு சங்கம் வந்து சிறார்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் விளையாட்டை கற்கவில்லை என்றால், போட்டி நிலையை அடைவதற்குத் தங்கள் திறமைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்று அவர்களுக்குத் தெரியாது," என்றார் அவர்.

இன்று புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெற்ற Putrajaya Aktif எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டம் உணவு முறை மற்றும் ஆரோக்கியத்தின் அம்சங்களையும் கண்காணிக்கும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)