ஜாசின், 16 ஏப்ரல் (பெர்னாமா) -- அண்மையில், விரைவுப் பேருந்தை ஆபத்தான முறையில் செலுத்தியதாக நம்பப்படும் அதன் முன்னாள் ஓட்டுநரும் பெண் ஒருவரும் இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்ஷன் 42(1)-இன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு, இன்று, மலாக்கா ஜாசின் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், மஜிஸ்திரேட் மசான சினின் அத்தடுப்புக் காவல் உத்தரவை வெளியிட்டார்.
நேற்று, ஜாசின் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு இச்சம்பவம் குறித்து விளக்கமளிக்க வந்த 31 வயதுடைய அவ்வாடவரையும், 21 வயதுடைய அப்பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
வடக்கு - தெற்கு நெடுஞ்சாலை, PLUS-இல் அப்பெண்ணை அவ்வாடவரின் மடியில் அமர வைத்துக்கொண்டு பேருந்தை செலுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு உதவ அவர்களுக்கு அழைக்கப்பட்டனர்.
கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இரவு மணி 7.30 அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தின் காணொளி மறுநாள் ஏப்ரல் 13-ஆம் தேதி மாலை மணி 5.30 அளவில் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]