குவாந்தான், ஏப்ரல் 17 (பெர்னாமா) -- இன்று பின்னிரவு பகாங் தெமர்லோ, தாமான் தெமர்லோ ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 13 பேர் உயிர் தப்பினர்.
பின்னிரவு மணி 2.26-க்கு இச்சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை JBPM-இன் பேச்சாளர் தெரிவித்தார்.
மூன்று வீடுகள் சம்பந்தப்பட்ட இச்சம்பவத்தில், ஒரு வீடு 80 விழுக்காடு சேதமடைந்துள்ளதாகவும் மற்ற இரு வீடுகள் ஒவ்வொன்றும் 20 முதல் 30 விழுக்காடு வரை தீக்கிரையாகியதாகவும் பகாங் மாநில JBPM இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இச்சம்பவத்தில், பெரோடுவா கஞ்சில் ரக கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இன்று அதிகாலை மணி 3.16க்கு, தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)