Ad Banner
 பொது

சுகாதாரப் பரிசோதனை திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியிருக்கும் பெர்னாமா

27/04/2026 06:41 PM

கோலாலம்பூர், ஏப்ரல் 27 (பெர்னாமா) --  ஊழியர்களின் உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதால்  தேசிய இருதய சிகிச்சைக் கழகம், IJN-இல், ESP எனப்படும் சுகாதாரப் பரிசோதனை திட்டத்தை மீண்டும்,மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா மேற்கொண்டது.

மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத்திட்டம் ஊழியர்களின் வயதைக் காரணமாகக் கொள்ளாமல் அவர்களின் சேவை மற்றும் கடப்பாடு அடிப்படையில் நல்வாழ்வைப் பேணுவதற்கான ஒரு முயற்சியாக கொண்டுள்ளது என்று பெர்னாமா தலைமை நிர்வாக அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் கூறினார்.

இவ்வாண்டு அதிகாரிகளின் எண்ணிக்கை 60-ஆக அதிகரித்திருக்கும் நிலையில், இது உடல்நலத்தைப் பேணுவதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்திருப்பதைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

"எனவே, இது உங்களின் உண்மையான வயதுடன் பொருந்தவில்லை. ஏனென்றால், இவ்வாண்டு அது 36 முதல் 40-க்கும் இடையில் உள்ளது. நாற்பதுகளின் ஆரம்பம். எனவே, ஊழியர்களின் வருகை, அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. ஏனென்றால், தொடக்கத்தில் பலர் தங்களுக்கு கிடைக்கும் முடிவுகளைப் பற்றி கவலைப்பட்டதால், சற்று சந்தேகத்துடன் இருந்தார்கள் என்று நான் நம்புகிறேன்," என்றார் அவர்.

இவ்வாண்டு இத்திட்டத்தில் பங்கேற்றவர்களில் சுமார் 80 விழுக்காட்டினர், பெர்னாமா செய்தி பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள்  என்று அவர் கூறினார்.

மேலும், தொடக்கத்தில் செயலாக்கக் குழுவை மட்டுமே மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம், முதல் ஆண்டில் பங்கேற்றவர்களின் பெரும்பான்மையானோர் செய்தி பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று அவர் தெரிவித்தார்.  

பணியில் இருக்கும்போது மாரடைப்பு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும், ஆரம்பகால அபாயங்களைக் கண்டறிவதற்கும் வழங்கப்படும் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு பெர்னாமா ஊழியர்களை  நூருல் அஃபிடா கமாலுடின் கேட்டுக்கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)