ஷா ஆலம், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- காகாசான் ரூமா பங்சா முன்னெடுப்பின் மூலம், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட மேலும் பல முக்கியப் பிரமுகர்கள் அம்னோவில் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விண்ணப்பங்கள் உட்பட, இதுவரை மொத்தம் 6,252 பேர் அம்னோவில் மீண்டும் இணைவதற்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும், இது ஒரு கணிசமான நல்ல முன்னேற்றம் என்றும் அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறினார்.
''அதிகமானோரைச் சந்தித்திருக்கிறோம். ஆனால், கௌரவத்தைக் காக்க நான் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடத் தேவையில்லை. நாங்கள் அனைவரையும் நிபந்தனையின்றி வரவேற்கிறோம். அவர்கள் என்னை அதிகாரவமில்லாமல் சந்தித்து, தாங்கள் பங்கேற்பதற்கான விருப்பத்தைத் தெரிவித்து ஒரு கடிதம் மட்டும் எழுதி இந்த விண்ணப்பத்தை எளிதாக்கினோம். நாங்கள் உடனடியாக முடிவும் தெரிவித்து விடுவோம்,'' என்றார் அவர்.
இன்று, ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலத்தில் ரிஸ்மார்ட் க்ரோசர் பேரங்காடியைத் திறந்து வைத்த பிறகு துணைப் பிரதமருமான டாக்டர் அஹ்மட் சாஹிட் இவ்வாறு கூறினார்.
அந்த விண்ணப்பத்தை இனி ரூமா பங்சா குழுவிற்குப் பரிந்துரைக்கத் தேவையில்லை என்றும், அதற்குப் பதிலாக ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் நோர்டின் தலைமையிலான குழுவிடம் வழங்க அம்னோ உச்சமன்றம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)