சூரிக், 26 ஏப்ரல் (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டு கிராஸ்ஹொப்பர் கிண்ண ஸ்குவாஷ் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு தேசிய மகளிர் ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி தேர்வாகினார்.
இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அவர் எகிப்தின் அமினா ஒர்ஃபியுடன் விளையாடினார்.
முதல் செட்டில் 11-7 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்ற சிவசங்கரி, அடுத்த இரண்டு செட்களில் 5-11, 8-11 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டார்.
இருப்பினும் திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தி மீதமுள்ள இரு செட்களையும் 11-9, 11-5 என்ற புள்ளிகளில் கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தார்.
உலகின் ஆறாவது தரவரிசையில் உள்ள சிவசங்கரி, இந்த ஆட்டத்தை 81 நிமிடங்கள் தமக்கு சாதகமாக முடித்து வைத்தார்.
இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் சதோமி வதாநாபேவுடன் சிவசங்கரி மோதவுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)