Ad Banner
 பொது

சண்டக்கான் தீ விபத்து; ஆவணங்கள் தணிக்கையின்றி வழங்கப்படாது

21/04/2026 05:30 PM

புத்ராஜெயா, 21 ஏப்ரல் (பெர்னாமா) -- சபா, சண்டக்கான் கம்போங் பஹாகியா தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆவணங்கள் மொத்தமாகவோ அல்லது தணிக்கையின்றியோ வழங்கப்படப் போவதில்லை என்பதை உள்துறை அமைச்சு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

9,000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 1,000 வீடுகள் சம்பந்தப்பட்ட ஆவணச் சரிபார்ப்பு செயல்முறை முழுமையாக மேற்கொள்ளப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

''உள்துறை அமைச்சு, குறிப்பாக உண்மையான குடியுரிமை அந்தஸ்து உள்ளவர்களுக்கு, அனைத்து முயற்சிகளுக்கும் உதவும். அப்படி, அச்சம்பவத்தில் தங்களின் ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், மாற்று ஆவணங்களை வழங்க நாங்கள் உதவுவோம். ஆம். ஆனால், அதற்காக நாங்கள் அவர்களுக்கு மொத்தமாக  வழங்குவோம் என்று அர்த்தமல்ல. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும்  தகுதியானவர்கள். ஆம். நாங்கள் அவர்களை ஒவ்வொருவராகக் கையாள்வோம்,'' என்று அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சண்டக்கான்,கம்போங் பஹாகியா என்ற மிதக்கும் கிராமத்தில் ஏற்பட்ட பெரும் தீ, அப்பகுதியின் 90 விழுக்காட்டுப் பரப்பளவை உள்ளடக்கி, சுமார் 1,000 வீடுகளைத் தீக்கிரையாக்கியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)