ஜார்ஜ்டவுன், 24 ஏப்ரல் (பெர்னாமா) -- மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் ஒத்துழைப்பின் மூலம் இம்முறை பினாங்கில் நடைபெறவிருக்கும் தேசிய ஊடகவியலாளர் தினம், ஹவானா 2026 கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.
பினாங்கு, ஜார்ஜ்டவுனில் இன்று மாநில அரசாங்கச் செயலாளர் டத்தோ ஶ்ரீ சுல்கிப்ளி லோங் உடனான சந்திப்பில் இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக, தொடர்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அப்துல் ஹலிம் ஹம்சா தெரிவித்தார்.
''நாம் அனைவரும் இதை கொண்டாட்டமாக்குவோம். ஏனெனில், இது ஏற்கனவே தொழில்முறை மற்றும் பொறுப்பான சேவையை வழங்கிய ஊடகத் துறைக்கு நாடு அளிக்கும் பாராட்டும் மரியாதையுமாகும். ஏனெனில் ஊடகம் என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தகவல்களையும் அறிவொளியையும் வழங்கும் ஒரு களம். பினாங்கில் நடைபெறும் 2026 ஹவானாவிற்கு உங்களை வரவேற்கிறோம்'', என்றார் அவர்.
மலேசிய தேசிய செய்தி நிறுவனமான, பெர்னாமா மூலம் தொடர்பு அமைச்சு ஏற்பாடு செய்யும் இந்நிகழ்ச்சி, ஊடகப் பணியாளர்களின் பங்களிப்பைப் பாராட்டுவதற்கான முக்கிய தளமாக விளங்குவதாக டத்தோ அப்துல் ஹலிம் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)