Ad Banner
 பொது

நெகிரி செம்பிலான் சட்டமன்றக் கூட்டத்தொடர் புதிய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

23/04/2026 03:34 PM

சிரம்பான், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- இன்று தொடக்கம் கண்ட நெகிரி செம்பிலான் மாநில 15வது சட்டமன்றத்தின் நான்காம் தவணைக்கான முதலாவது கூட்டத்தொடர், பின்னர் அறிவிக்கப்படும் புதிய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் அறிவித்திருக்கிறார்.

''நமது கூட்டம், சூழ்நிலைகளுக்கு ஏற்ற மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது,'' என்றார் அவர்.

இன்று தொடங்கிய நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர், ஏப்ரல் 27ஆம் தேதி, திங்கட்கிழமை தொடரப்படுவதற்கு முன்னர், நான்கு நாள்களுக்கு நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், அக்கூட்டத்தொடர் புதிய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)