Ad Banner
 உலகம்

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரக் காலவரையறை இல்லை - டிரம்ப்

23/04/2026 05:04 PM

வாஷிங்டன் டி.சி, 23 ஏப்ரல் (பெர்னாமா) --  ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

போர் நிறுத்தம் அல்லது புதிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை அவர் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தைகளுக்கான பரிந்துரைகளை முன்வைக்க ஈரானுக்கு கூடுதல் அவகாசம் அளிப்பதே இதன் நோக்கமாகும் என்று வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலைன் லெவெட் தெரிவித்தார்.

''பெயர் குறிப்பிட விரும்பாத சில வட்டாரங்களிலிருந்து 3 முதல் 5 நாள்கள் காலக்கெடு உள்ளதாக செய்திகள் வந்துள்ளன என்பது எனக்குத் தெரியும். அது உண்மையல்ல. அதிபர் (டிரம்ப்) தாமாகவே எந்தக் காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை. இறுதியில், அவரே கால அட்டவணையைத் தீர்மானிப்பார்'', என்றார் அவர்.

நேற்றிரவுடன் நிறைவுபெறவிருந்த இரண்டு வார போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஈரானுடனான போர் நிறுத்தத்தை மூன்று முதல் ஐந்து நாள்களுக்கு டிரம்ப் நீட்டிக்கக்கூடும் என மூன்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, அமெரிக்க இணைய ஊடகமான Axios புதன்கிழமை செய்தி வெளியிட்டது.

பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய போர், நான்கு முதல் ஆறு வாரங்கள் நீடிக்கும் என்று டிரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)