வாஷிங்டன் டி.சி., 26 ஏப்ரல் (பெர்னாமா) -- வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சியில் திடீரென பலத்த சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் அவரது மனைவியும் அதிகாரிகளால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அவர்களுடன், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரமுகர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.
சுமார் 2600 பேர் கலந்து கொண்ட இந்த விருந்து நிகழ்ச்சியில் நான்கு முதல் ஆறு முறை வெடிச் சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 31 வயது ஆடவரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பல ஆயுதங்களை வைத்திருந்த அவர், பாதுகாப்புச் சோதனையைக் கடந்து அதிகாரி ஒருவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
பின்னர் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாகத் வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்திருக்கிறது.
30 நாள்களுக்குள் இந்த விருந்து நிகழ்ச்சி மீண்டும் நடத்தப்படும் என்று டிரம்ப் தமது சமூக ஊடக பதிவில் தெரிவித்திருக்கிறார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]