ஹொர்சென்ஸ், 26 ஏப்ரல் (பெர்னாமா) -- தோமஸ் கிண்ண பூப்பந்து போட்டி.
நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் மலேசியா 3-2 என்ற புள்ளிகளில் இங்கிலாந்து வீழ்த்தி அடுத்த சுற்று ஆட்டத்திற்கு தேர்வாகியது.
டென்மார்க், ஹொர்சென்சில் நடைபெறும் தோமஸ் கிண்ண பூப்பந்து போட்டியில் வரலாற்று வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் பி குழுவில் இடம்பெற்றுள்ள மலேசியா நேற்று இங்கிலாந்துடன் மோதியது.
தொடக்க ஆட்டத்தில் தேசிய ஆடவர் ஒற்றையரான ஜஸ்டின் ஹோ 19-21, 19-21 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டார்.
அதனை தொடர்ந்து, தேசிய ஆடவர் இரட்டையரான ஏரன் சியா-சோ வூய் யிக், ஒலிவர் பட்லர்-சாமுவேல் ஜோன்ஸ் ஜோடியை 21-19, 21-13 என்ற புள்ளிகளில் தோற்கடித்து ஆட்டத்தை 1-1 என்று சமன் செய்தனர்.
மூன்றாம் ஆட்டத்தில் மலேசியாவின் அய்டில் ஷொலெ அலி சடிகின் 16-21, 15-21 என்று தோல்வி அடைந்த நிலையில்,
மென் வெய் சொங்-தீ கய் வுன் ஜோடி மலேசியாவுக்கு இரண்டாவது புள்ளியை பெற்றுத் தந்தது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாம் ஆட்டத்தில் மலேசியாவின் லீ சீ ஜியா 21-13, 21-11 என்ற நேரடி செட்களில் மலேசியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் மலேசியா பின்லாந்தை எதிர்கொள்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)