சூரிக், 27 ஏப்ரல் (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டு கிராஸ்ஹொப்பர் கிண்ண ஸ்குவாஷ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பின் தங்கியிருந்தாலும், திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தி தேசிய மகளிர் ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி வெற்றியாளராக வாகை சூடினார்.
நேற்றிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவர் ஜப்பானின் சதோமி வதாநாபேவுடன் விளையாடினார்.
முதல் செட்டின் 15-13 என்ற புள்ளிகளில் வென்ற சிவசங்கரி, அடுத்த இரண்டு செட்களிலும் 5-11, 5-11 என்று தோல்வி கண்டார்.
இருப்பினும், கெடா மாநிலத்தில் பிறந்த சிவசங்கரி திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தத் தொடங்கினார்.
அதன் பயனாக, எஞ்சிய இரண்டு செட்களையும் 11-7, 11-8 என்ற புள்ளிகளில் கைப்பற்றி, வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இந்த ஆட்டம் 62 நிமிடங்கள் வரை நீடித்தது.
இதன் வழி, இதுவரை சதோமி வதாநாபேவுடன் நடைபெற்ற எட்டு ஆட்டங்களில் சிவசங்கரி ஏழு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)