புதுடெல்லி, 20 ஏப்ரல் (பெர்னாமா) -- மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக செலவுகள் அதிகரித்து வருவதால், இந்திய விமானப் போக்குவரத்துத் துறை தனது செயல்பாடுகளை நிறுத்தும் விளிம்பில் உள்ளதாக இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு எச்சரித்திருக்கிறது.
இதற்கு தீர்வுக்கான அரசாங்கம் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று, அக்கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Air India, IndiGo மற்றும் SpiceJet ஆகிய நிறுவனங்கள் அக்கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன.
உள்நாட்டு மற்றும் அமைத்துலக விமான செயல்பாடுகளுக்கு ஒரே மாதிரியான எரிபொருள் விலை நிர்ணய முறையை அமல்படுத்த விமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
எரிபொருள் விலை உயர்வால் விமான நிறுவனங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்புகள் ஏற்படும் என்றும் விமானப் பயணங்கள் ரத்தாக வழிவகுக்கும் என்றும், அந்நாட்டின் பொது விமானப் போக்குவரத்து அமைச்சிற்கு எழுதிய கடிதத்தில் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும், செயல்பாடுகளைத் தொடரவும், தற்போதைய சூழ்நிலையைச் சமாளிப்பதற்கும் உடனடியான நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)