புத்ராஜெயா, ஏப்ரல் 29 (பெர்னாமா) -- டாரா, அமோய் மற்றும் கெலாட், DAK யானைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவற்றை மலேசியாவிற்கு மீண்டும் கொண்டு வருவதற்கான பரிந்துரை, தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்.
இவ்விவகாரத்தில், பொதுமக்களின் உணர்வும் நாட்டின் வனவிலங்கு பாதுகாப்பு கொள்கையும் கருத்தில் கொள்ளப்படுவதாக இயற்கை வள மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர்தர் ஜோசப் குரூப் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில், Sekretariat Bahana Kesetiaan Negara, SBKN சமர்ப்பித்த மனுவை அமைச்சு ஆய்வு செய்ததோடு, அரசாங்க சார்பற்ற அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படுவதாக ஜோசப் குரூப் கூறினார்.
''ஒப்பந்தத்தில் இரு தரப்பினருக்கும் இடையே முரண்பட்ட கடமைகள் இருப்பதால், தைப்பிங் மிருகக்காட்சி சாலை மற்றும் நைட் சஃபாரியின் நிர்வாகம், ஒசாகா டென்னோஜி மிருகக்காட்சி சாலை தரப்புடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி, யானைகளை மீண்டும் நாட்டிற்குக் கொண்டு வருவதற்கான தேவைகளையும் வழிமுறைகளையும் மதிப்பிடுமாறு நான் வலியுறுத்த விரும்புகிறேன்,'' என்றார் அவர்.
மூன்று யானைகளை மாற்றுவதற்கான ஒப்பந்தம், அமைச்சின் தலையீடு இல்லாமல், இரு தரப்பினருக்கும் இடையே நேரடியாக வணிகத்திலிருந்து வணிகம், B2B முறையில் கையெழுத்திடப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)