BREAKING NEWS   Thomas Cup: China 2 Malaysia 0: Liang Wei Keng-Wang Chang bt Aaron Chia-Soh Wooi Yik 24-22, 21-14 | 
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

தகவல்களை வழங்குவதில் செய்தியாளர்கள் ‘பந்துன்’ பயன்படுத்த வலியுறுத்து

30/04/2026 04:26 PM

அங்காசாபூரி, ஏப்ரல் 30 (பெர்னாமா) -- செய்திகளின் வழி தகவல்களைத் தெரிவிக்கும் ஒரு ஊடகமாக PANTUN பயன்படுத்துவது, மலாய் கலாச்சாரத்தையும் மொழியையும் பேணுவதில் மற்றும், மக்களுக்குத் தெளிவான, அர்த்தமுள்ள தகவல்களை வழங்குவதில் ஒரு பயனுள்ள முயற்சியாகக் கருதப்படுகிறது.

இன்றைய தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட ஊடகச் சூழலுக்கு ஏற்ப, இம்முறை நடத்தப்படும் இரண்டாவது பந்துன் (PANTUN) ஹவானா-DBP 2026 விழா, பத்திரிகைத் தளத்தில் மலாய் மொழியை மேம்படுத்த உதவும் என்று 2026ஆம் ஆண்டுக்கன ஹவானா நிகழ்ச்சி இயக்குநர் முஹமட் ஷுக்ரி இஷாக் நம்பிக்கைத் தெரிவித்தார்.

"தற்போது ஊடகங்களின் சவால்கள் பெரும்பாலும் தற்போதைய தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். எனவே, கடந்த காலத்தில் தகவல் வழங்கும் முறை மிகவும் பாரம்பரியம் சார்ந்ததாக இருந்திருக்கலாம். ஆனால் தற்போது, ​​தகவல்களை வழங்குவதில் பத்திரிகையாளர்கள் அனைத்து புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதால், தொழில்நுட்பத்தின் பயன்பாடு மிகவும் மேலோங்கி இருப்பதை நாம் காண்கிறோம்," என்றார் அவர்.

Kraf Jalan Conlay வளாகத்தில் உள்ள பங்குங் சாரியில் மே 9ஆம் தேதி Dewan Bahasa dan Pustaka-வின் ஒத்துழைப்புடன் பெர்னாமா ஏற்பாட்டில் 2026 பந்தூன் ஹவானா-DBP விழா நடைபெறவிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)