கூச்சிங், 02 மே (பெர்னாமா) -- மலேசிய சூப்பர் லீக் கிண்ணம்.
வெள்ளிக்கிழ்மை இரவு சரவாக் மாநில அரங்கில் நடைபெற்ற சூப்பர் லீக் போட்டியில் கூச்சிங் சிட்டி அணி, திரெங்கானு எஃப்.சி-யை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஆட்டம் தொடங்கிய 13-வது நிமிடத்தில் திரெங்கானு எஃப்.சி-யின் ஆட்டக்காரர் ஷெர்வோனி மபாட்ஷோவ் தமது அணிக்கான முதல் கோலை அடித்து உள்ளூர் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.
திரெங்கானு எஃப்.சி-யின் கோலைத் தொடர்ந்து, இரண்டாம் பாதி ஆட்டத்தில் கூச்சிங் சிட்டி தமது ஆட்டத்தை வலுப்படுத்தியது.
63-வது நிமிடத்தில் கூச்சிங் சிட்டி-இன் ஆட்டக்காரர் வன்ஜா ரொனால்ட் ங்கா ஒரு கோலை அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
அதனைத் தொடர்ந்து 79-வது நிமிடத்தில் கூச்சிங் சிட்டி-யின் ஜெரோம் எம்பேக்கோ எடாமே ஒரு கோலைப் போட்டு தமது அணியை முன்னிலைப்படுத்தினார்.
இவ்வெற்றியின் வழி கூச்சிங் சிட்டி தனது சொந்த மண்ணில் மூன்று முக்கியமான புள்ளிகளைப் பெற்றது.
ஆட்டத்தின் இறுதி வரை ஆதிக்கம் செலுத்தி 2-1 என்ற புள்ளிகளில் தனது அணியின் வெற்றியை உறுதி செய்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)