Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

அமைச்சுகளுக்கு இடையிலான சிறப்பு பணிக்குழு - சுகாதார அமைச்சு உருவாக்கம்

02/05/2026 05:25 PM

சண்டாக்கான், மே 02 (பெர்னாமா) -- நாட்டின் சுகாதாரத் துறையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறைப் பிரச்சனையையும் திறமையானவர்களைத் தக்கவைப்பது உள்ளிட்ட அம்சங்களையும் ஆராய்வதற்காக அமைச்சுகளுக்கு இடையிலான சிறப்பு பணிக்குழுவை சுகாதார அமைச்சு அமைத்துள்ளது.

இப்பிரச்சனைக்கு ஒரு விரிவான தீர்வைச் செம்மைப்படுத்தி வகுப்பதற்கு  குறிப்பிட்ட காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மட்  தெரிவித்தார்.

"விமர்சனங்கள் குறித்து நான் நன்கு அறிந்திருக்கிறேன். மேலும், இந்தப் பிரச்சனையை, குறிப்பாக சபாவில், கையாள்வதற்காக உயர் கல்வி அமைச்சும் பொது சேவை துறை, ஜே.பி.ஏ, அதிலும் குறிப்பாக நிதி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுமாறு, தலைமைச் செயலாளர், தலைமை இயக்குநர் மற்றும் சில பிரிவுகளிடம் நான் கேட்டுக் கொண்டுள்ளேன்,'' என்றார் அவர்.

இன்று சபா, சண்டக்கான் நல்வாழ்வு மையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.

மருத்துவர்கள் பற்றாக்குறைப் பிரச்சனை, மற்ற அமைச்சுகளுடன் இணைந்து முழுமையாகவும் முறையாகவும் கையாளப்பட வேண்டும் என்றும் டாக்டர் சுல்கிஃப்ளி குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)