ஜோகூர் பாரு, 07 மே (பெர்னாமா) -- ஆசியான் வெற்றியாளர் கிளப் காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஜோகூரின் ஜே.டி.தி 1-3 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தின் புரிராம் யுனைடெட் அணியிடம் தோல்வி கண்டுள்ளது.
நேற்று இரவு சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடந்த இப்போட்டியில், தோல்வி கண்டதை அடுத்து, ஜே.டி.தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இழுபறி நிலைக்கு வந்துள்ளது.
இந்த தோல்வியால், வரும் மே 13-ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெறும் இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில் மலேசியப் கடினமான சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் தங்கள் வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்ள, ஜே.டி.தி ஒரு பெரிய வெற்றியைப் பின்தொடர வேண்டியுள்ளது.
முதல் பாதி ஆட்டத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கிய புரிராம் அதன் முதல் கோல் கோலை 33-வது நிமிடம் அடித்தது.
இரண்டாம் பாதியில் இரு அணிகளின் பல ஆட்டக்காரர்களுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டதாலும் , புரிரமின் மற்றொரு கோல் நிராகரிக்கப்பட்டதாலும் ஆட்டம் மேலும் பதற்றமாக இருந்தது.
தொடர்ந்து தங்கள் அழுத்தத்தை இரட்டிப்பாக்கிய ஜே.டி.திஒரு கோல் அடித்து ஆட்டத்தின் இடைவெளியைக் குறைத்து, உள்ளூர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஆயினும் மேலும் இரு கோல்கள் அடித்து புரிராம் ஆட்டத்தை அதற்கு சாதகமாக்கி வெற்றிப் பெற்றது.
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)