Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

அனுமதியின்றி ஹோர்முசை கடக்க முயன்றால் பதிலடி கொடுக்கப்படும் - ஈரான்

05/05/2026 05:53 PM

தெஹ்ரான், 05 மே (பெர்னாமா) -- பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் ஹோர்முஸ் நீரிணையைக்  கடக்க முயன்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கூறியது. 

அந்நீரிணையில், எந்தவொரு நடமாட்டத்திற்கும் தெஹ்ரானிடம் இருந்து அதிகாரப்பூர்வ அனுமதி தேவை என்றும், அதனை மீறுவோருக்குப் பதிலடி கொடுக்கப்படும் எனவும் ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அந்த எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததால் அமெரிக்காவின் கப்பல் தாக்கப்பட்டதாகவும், பின்னர் அது அப்பகுதியிலிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அப்படை  தெரிவித்து. 

இருப்பினும், அமெரிக்காவின் எந்தப் போர்க்கப்பலும் ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்று அமெரிக்கத் தரப்பு தெரிவித்தது.

முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டதும் ஈரானின் ஆறு சிறு கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கின்றது.  

அதிபர் டோனல்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவின்படி, வர்த்தகக்கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கத் தாக்குதலைத் தொடுத்ததாக அமெரிக்க இராணுவம் கூறியது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)