Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

உத்தரப் பிரதேசம்: மழை, ஆலங்கட்டி மழையால் 100 பேர் பலி

15/05/2026 03:57 PM

உத்தரப் பிரதேசம், 15 மே (பெர்னாமா) -- மழை மற்றும் ஆலங்கட்டி மழையை ஏற்படுத்திய ஒரு கடுமையான புயல், இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தைத் தாக்கியதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், 24 மணி நேரத்திற்குள் நிவாரண நிதியை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பருவமழை தணிவதற்கு முன்பு, மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடைக் காலத்தில் வட மாநிலங்களில் புயல் ஏற்படுவது வழக்கம். 

ஆனால், புதன்கிழமை ஏற்பட்ட புயலில் 59 பேர் காயமடைந்ததோடு, 87 வீடுகள் சேதமடைந்தன.

மேலும், 114 கால்நடைகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் பன்னிரண்டு மாவட்டங்களில் குறைந்தது 104 பேர் உயிரிழந்ததாகவும், இந்துக்களின் புனித யாத்திரை நகரமான பிரயாக்ராஜைச் சுற்றியுள்ள பகுதியே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில நிவாரண ஆணையர் Hrishikesh Bhaskar Yashod-தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலினால், மரங்கள் வேரோடு சாய்ந்த வேளையில், சுவர்களும் இடிந்து விழுந்ததில், சிலர் பலியானதாக மாநில நிவாரண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)