Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஊடகத் துறையை வலுப்படுத்தும் தளமாக 2026-ஆம் ஆண்டு தேசிய ஊடகவியலாளர் தினம்

06/05/2026 05:20 PM

கோலாலம்பூர், 06 மே (பெர்னாமா) --  நாட்டின் ஊடகத் துறையை போட்டித்திறன் வாய்ந்ததாகவும், நேர்மையுடனும் வலுப்படுத்தற்கும் முக்கியமான ஒரு தளமாக 2026-ஆம் ஆண்டு தேசிய ஊடகவியலாளர் தினம், ஹவானா அமைய வேண்டும்.

தகவல் வழங்கும் முறைகளில் பொதுமக்களின் நம்பிக்கை உட்பட இலக்கவியல் காலக்கட்டத்தில் ஊடகத் துறை எதிர்கொண்டும் வரும் பெரிய சவால்களுக்கும் மத்தியில், மிகச் சரியான நேரத்தில் ஹவானா நடைபெறுவதாக மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் துணை தலைமை செய்தி ஆசிரியர் முஹமட் ஷுக்ரி இஷாக் தெரிவித்தார்.

''அனைத்து ஊடகவியலாளர்களும் ஒன்றிணைந்து, நாம் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுவார்கள் என்பது எங்களது நம்பிக்கை'', என்றார் அவர்.

இன்று பெர்னாமாவின் Apa Khabar Malaysia நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முஹமட் ஷுக்ரி அதனைத் தெரிவித்தார்.

இலக்கவியல் காலக்கட்டத்திலும் சரியான மற்றும் நம்பகம் வாய்ந்த தகவல்களை மக்களுக்கு கொண்டு செல்லும் வழிகாட்டியாகவும் ஹவானா அமையும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)