இந்தியா, 15 மே (பெர்னாமா) -- பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
ஈரானில் நிலவும் போர், ஆதிகரித்து வரும் எரிசக்தி விலைகள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக விரிவுடைந்து வரும் சிக்கல்களுக்குத் தீர்வுக் காணும் நோக்கில் அவர்களுடன் இரண்டு நாள் சந்திப்பை மோடி தொடங்கினார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தூதர்களுடன் புதிய உறுப்பு நாடுகளையும் இக்கூட்டம் ஒன்றிணைக்கிறது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் ரஷ்யாவின் உயர்மட்ட தூதர் செர்கே லாவ்ரோவ் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனிடையே, உலகளாவிய மற்றும் வட்டாரத்தில் நிலவும் சவால்கள் உட்பட உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவதற்கான வழிகள் ஆகிய விவகாரங்கள் குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)