Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

சொகுசு கப்பலில் ஐந்து ஹன்டா நச்சுயுரி தொற்று உறுதி

08/05/2026 06:26 PM

ஜெனிவா , மே 08 (பெர்னாமா) -- MV Hondius எனும் சொகுசு கப்பலில் பதிவான எட்டு நோய் சம்வங்களில் ஐந்து சம்பவங்கள் ஹன்டா எனும் நச்சுயிர் தொற்று என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவை ஆண்டிஸ் வகை தொற்று என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெட்ரோஸ் அதானோம் கெப்ரியெசுஸ் தெரிவித்துள்ளார்.

''இதில் சம்பந்தப்பட்ட ஹன்டா வகை தொற்று ஆண்டிஸ் வைரஸ் ஆகும். இது லத்தீன் அமெரிக்காவில் காணப்படுவதுடன், மனிதர்களிடையே குறைந்த அளவில் பரவும் திறன் கொண்டதாக அறியப்பட்ட ஒரே தொற்று இதுவாகும்., '' என்றார் அவர்.

தென் அமெரிக்காவில் பெரும்பாலும் காணப்படும் அரிய வகை தொற்றுகளில் இந்த ஆண்டிஸ் தொற்றும் அடங்கும்.

எலிகள் மூலம் பரவக்கூடிய இத்தொற்று சில நேரங்களில் மனிதர்களிடையே குறைந்த அளவில் பரவக்கூடிய திறனையும் கொண்டுள்ளது.

முன்பு, சுகாதார பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் போன்ற நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களிடம் மட்டுமே பரவக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆறு வாரங்கள் வரை உடலில் இருக்கக்கூடிய இந்நோய், அதிகமானோருக்கு பரவும் வாய்ப்புகள் உள்ளதாக தெட்ரோஸ் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)