Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிசீலனைக்குப் பின்னர் கெடா சுல்தானிடம் சமர்பிக்கப்படும்

09/05/2026 05:03 PM

அலோர் ஸ்டார், 09 மே (பெர்னாமா) -- பெர்சத்துவில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை குறித்து விரிவாக பரிசீலிக்கப்பட்ட பின்னர், கெடா சுல்தான் அல் அமினுல் கரிம் சுல்தான் சலேஹுடின் சுல்தான் பட்லிஷாவிடம் சமர்ப்பிக்கப்படும்.

இவ்விவகாரம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும், கெடா சுல்தானின் ஒப்புதலைப் பெறுவதோடு மட்டுமின்றி, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக செயல்முறையின்படியும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ முஹமட் சனுசி முஹமட் நோர் தெரிவித்தார்.

தற்போதைய நிலவரங்களை கெடா சுல்தானிடம் தெரிவிப்பதற்கு முன்னர், மாநில அரசாங்கம் இவ்விவகாரம் குறித்து ஆராய்ந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அவ்விரு அரசியல்வாதிகளும் தங்களின் கடமைகளை வழக்கம் போல் ஆற்றவர் என்றும் டத்தோ ஶ்ரீ முஹமட் சனுசி கூறினார்.

அனைத்து நடவடிக்கைகளும் நிர்வாக செயல்முறையைப் பின்பற்றப்படுவதோடு சுல்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டு, நிரணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி அச்செயல்முறை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கெடா மாநில விவசாயம், தோட்டம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான சுக்கா மெனந்தி சட்டமன்ற உறுப்பினர் சொவஹிர் அப்துல் கானி மற்றும் சுங்கை தியாங் சட்டமன்ற உறுப்பினரும், கெடா மாநில சட்டமன்றத் துணைத் தலைவருமான அப்துல் ரசாக் காமிஸ் ஆகியோர் பெர்சத்து கட்சியில் இருந்து நேற்று உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]