சுங்கை பூலோ, மே 09 (பெர்னாமா) -- சுங்கை பூலோ தொகுதியில் 2025 எஸ்பிஎம் தேர்வு எழுதிய மொத்தம் 934 மாணவர்கள், ஊக்கத் தொகையாக சுமார் 3 லட்சம் ரிங்கிட் நிதி உதவியைப் பெற்றுள்ளனர்.
முன்னதாக, 7ஏ முதல் 11ஏ-க்கள் வரை பெற்ற மாணவர்களுக்கே இந்நிதியுதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை 4ஏ-க்களுக்கு மேல் பெற்றவர்களுக்கும் இந்நிதியுதவி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர்
டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதிகமான மாணவர்கள் இந்த ஊக்கத்தொகையை பெறும் வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக மனிதவள அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், சுங்கை பூலோ பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களில் 10,000 இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் குறித்து அவர் இவ்வாறு அறிவித்தார்.
இன்று சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில், 2025 SPM தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு ரமணன் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)