Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

தனித்து வாழும் தாய்மார்களுடன் அன்னையர் தினம் கொண்டாடிய யுனேஸ்வரன் ராமராஜ்

12/05/2026 03:35 PM

பங்சார், 12 மே (பெர்னாமா) --  அன்னையர் தினத்தை முன்னிட்டு தமது தலைமையில் ஏற்பாடு செய்திருந்த தனித்து வாழும் தாய்மார்களுடனான சிறப்பு விருந்தோம்பல் நிகழ்ச்சியில் தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தனித்து வாழும் தாய்மார்கள் கலந்து சிறப்பித்தனர்.

விருந்தோம்பல் நிகழ்ச்சியின் மூலம் தமது தாயாருக்கு எதிர்பாரா மகிழ்ச்சியைக் கொடுக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், தனித்து வாழும் தாய்மார்களுடன் ஓர் அர்த்தமுள்ள சந்திப்பை நடத்தியதாகவும் யுனேஸ்வரன் கூறினார்.

இதனிடையே, தனித்து வாழும் தாய்மார்களின் வாழ்க்கை அனுபவங்கள், தியாகம் மற்றும் சவால்கள் குறித்து தாம் நேரடியாக கேட்டறிவதற்கு விருந்தோம்பல் நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்ததாக, தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் யுனேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)