Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

தாய்லாந்து பொது பூப்பந்து போட்டி; ஆடவர் இரட்டையர் பிரிவில் மலேசியா வெற்றி

13/05/2026 06:13 PM

தாய்லாந்து, மே 13 (பெர்னாமா) --  2026-ஆம் ஆண்டு தாய்லாந்து பொது பூப்பந்து போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் தேசிய ஆட்டக்காரர்களான கோ சி ஃவெய் - நூர் இசுடின் ரும்சானி முதல் வெற்றியைப் பதிவுசெய்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். 

ஜப்பான் போட்டியாளர்களை கடும் சவாலுக்கு பின்னர் வீழ்த்தியதன் மூலம்  நாட்டின் முன்னணி வீரர்கள் என்ற தங்களின் தகுதியை அவர்கள் நிரூபித்தனர்.

பேங்காக், Nimibutr அரங்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மலேசிய இணையான கோ சி ஃவெய் - நூர் இசுடின் ரும்சானி  ஜப்பானின் Hiroki Okamura-Kyohei Yamashita ஜோடியுடன் இன்று களம் கண்டனர். 

அதில், 21-15 என முதல் செட்டில் வெற்றிப் பெற்ற மலேசியா 17-21 என்ற புள்ளிகளில்  இரண்டாம் செட்டில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வி கண்டது. 

இருப்பினும், உலகத் தரவரிசையில் ஒன்பதாம் இடத்தில் உள்ள கோ சி ஃவெய் - நூர் இசுடின் மூன்றாம் செட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-12 என்ற புள்ளிகளோடு 56 நிமிடங்களில் தங்கள் வெற்றியை உறுதி செய்தனர். 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்ற அந்த ஜோடி காலிறுதியில் போட்டியிடுவதற்காக, நாளை சீனாவின் Huang Di-Liu Yang இணையை எதிர்கொள்வார்கள்.

இதனிடையே, ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில்  நாட்டின் மற்றுமொரு ஜோடியான சோங் ஹுன் ஹியான் - வோங் வின் சியான்  20-22, 26-24, 7-21 என்ற புள்ளிகளில் சீனா தைபேய் ஆட்டக்காரகளிடம் தோல்வி கண்டனர். 

அதேபோல, மகளிர் ஓற்றையர் பிரிவு ஆட்டத்தில் கோஜின் வெய்  உபசரணை நாட்டின் Yataweemin Ketklieng-கிடம் 21-13, 19-21 மற்றும் 16-2 எனும் நிலையில் வீழ்ந்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)