Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

எஸ்பிஆர்எம் புதிய ஆணையர் அதிகாரப்பூர்வமாக பணியைத் தொடங்கினார்

13/05/2026 05:25 PM

புத்ராஜெயா , மே 13 (பெர்னாமா) -- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக டத்தோ ஶ்ரீ அப்துல் ஹலிம் அமான், இன்று தமது பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார்

42 ஆண்டுகள் எஸ்.பி.ஆர்.எம்-இல் பணியாற்றி, நேற்று தமது சேவையில் இருந்து ஓய்வு பெற்ற டத்தோ ஶ்ரீ அசாம் பாக்கிக்கு பதிலாக அப்துல் ஹலிம் அமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முதல் தமது பணியைத் தொடங்கும் ஹலிம் அமானுக்கு அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பாகார் அறிக்கையின் வழி தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சட்டத்துறையில் அப்துல் ஹலிம் கொண்ட அனுபவமும் நம்பகத்தன்மையும், எஸ்.பி.ஆர்.எம்-இன் பங்களிப்பை, மலேசியாவிலும் அனைத்துலக அளவிலும், ஒரு மதிப்புமிக்க அமலாக்க அமைப்பாக மேலும் வலுப்படுத்தும் என தாம் நம்புவதாக ஷம்சூல் அஸ்ரி கூறினார்.

அதோடு, Abdul Halim-க்கு நியமனக் கடிதத்தை வழங்கும் புகைப்படத்தையும் Shamsul Azri தமது அதிகாரப்பூர்வ முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதேவேளையில், இதுவரை தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் ஆற்றிய சேவை மற்றும் பங்களிப்புகளுக்காக அவர் டான் ஶ்ரீ அசாம் பாக்கியை நன்றி பாராட்டினார்.

மற்றொரு நிலவரத்தில் எந்தவொரு தனிநபரும் புகார் அளிப்பதை எஸ்பிஆர்எம் தடுப்பதில்லை என அந்த ஆணையம் விளக்கம் அளித்திருக்கிறது.

மேலும், புகார் அளிக்கும் நபரின் பதவி அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் ஊழல் தொடர்பான புகார்களையும் தகவல்களையும் பெறுவதற்கு எப்போதும் தயாராக உள்ளதாக SPRM தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் அமலாக்க நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ஒரு எதிர்மறையான கண்ணோட்டத்தை உருவாக்கும் முயற்சி என்றும் எஸ்பிஆர்எம் சாடியுள்ளது.

எஸ்பிஆர்எம் வளாகத்திற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது ஒரு பொதுவான நடைமுறை என்றும், அது பாகுபாடு காட்டுவதோ அல்லது எந்தவொரு தரப்பினரும் புகார் அளிப்பதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டதோ அல்ல என்றும் எஸ்பிஆர்எம் விளக்கியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)