Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஜோ லோ மீதான விசாரணை தொடரும் - பி.டி.ஆர்.எம்

13/05/2026 06:17 PM

கோலாலம்பூர் , மே 13 (பெர்னாமா) -- ஜோ லோ, அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பிடம் மன்னிப்பு கோருவதற்கான விண்ணப்பம் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்த போதிலும் அவர் மீதான விசாரணையை அரச மலேசிய போலீஸ் படை (பி.டி.ஆர்.எம்) தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இவ்விவகாரம் இன்னும் தங்கள் கவனத்திலும் நடவடிக்கையிலும் உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபர் மீதான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தேசிய போலீஸ் படைத்தலைவர் டத்தோ ஶ்ரீ முஹ்மட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கும் முயற்சியில், சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பி.டி.ஆர்.எம் நல்லுறவை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற பி.டி.ஆர்.எம்-இன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முஹ்மட் காலிட் 
 கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)