கோலாலம்பூர், 16 மே (பெர்னாமா) -- 2026 அனைத்துலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, மலேசிய அருங்காட்சியக துறையின் கீழ் உள்ள 22 அருங்காட்சியகங்களும் வரும் மே 18ஆம் தேதி மலேசியர்களுக்கு இலவசமாகத் திறக்கப்படவிருக்கிறது.
அதிகமான மக்களை, குறிப்பாக இளைஞர்களை, நாட்டின் வரலாறு மற்றும் பாரம்பரியத்துடன் எளிதில் நெருங்க ஊக்குவிப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கம், என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் கூறினார்.
''வாழ்த்துக்கள்! இந்த முன்னெடுப்பு, குறிப்பாக இளம் தலைமுறையினர் உட்பட, மேலும் பலரை அருங்காட்சியகங்களுக்குச் செல்ல ஊக்குவிப்பதாகும். அதோடு, வரலாறு மற்றும் பாரம்பரியத்தை நெருங்கவும், அறிவுக் கழகங்களாகவும், பிரார்த்தனைக்கான தூண்டுகோலாகவும், தேசிய அடையாளத்தைக் கட்டமைப்பதற்கான ஒரு ஊடகமாகவும் அருங்காட்சியகங்களின் பங்கைப் போற்றவும் ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது,'' என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூரில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான மத்திய மண்டல ஒருமைப்பாட்டு வாரக் கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது ஏரன் இவ்வாறு கூறினார்.
தேசிய அளவிலான 2026ஆம் ஆண்டுக்கான தேசிய அருங்காட்சியக தினக் கொண்டாட்டம் ஜூன் 23 முதல் 30ஆம் தேதி வரை ஜோகூரில் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)