மெக்சிக்கோ, 16 மே (பெர்னாமா) -- மெக்சிக்கோ சிட்டியில் ஆசிரியர் தினமான இன்று, ஊதிய உயர்வு மற்றும் கொள்கை மாற்றங்களைக் கோரி ஆசிரியர்களும் ஆர்வலர்களும் பேரணி நடத்தினர்.
மேலும், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 2026 உலகக் கிண்ணத்தின் தொடக்க விழாவைப் பாதிக்கக்கூடிய ஒரு தேசிய வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
தேசியக் கல்விப் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு, சி.என்.டி.ஈ ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள், மேளங்களை முழக்கமிட்டபடி முதன்மை சாலையில் இருந்து சோகலோ என்ற பிரதானச் சதுக்கத்தை நோக்கிப் பேரணியாக சென்றனர்.
அயோட்சினாபாவில் உள்ள புறநகர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டதால், நுண்கலை அரண்மனை மற்றும் கல்வி அமைச்சு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அருகில் சாலைகள் மூடப்பட்டன.
அரசாங்கம் 9 விழுக்காடு ஊதிய உயர்வை அறிவித்த போதிலும், இந்த உயர்வு போதுமானதாக இல்லாததால் போராட்டங்கள் தொடரப்பட்டதாக சி.என்.டி.ஈ விவரித்தது.
மேலும், சம்பளத்தை இரட்டிப்பாக்கவும், முந்தைய கல்வி சீர்திருத்தங்களை ரத்து செய்யவும் அத்தொழிற்சங்கம் கோரியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)