Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கோலாலம்பூரில் பேருந்து நிறுத்தங்களை நிறுவ 15 லட்சம் ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீடு

15/05/2026 06:49 PM

கோலாலம்பூர், 15 மே (பெர்னாமா) --  கோலாலம்பூரில் புதிய பேருந்து நிறுத்தங்களை நிறுவுவதற்கும், பழையவற்றை மேம்படுத்துவதற்கும் கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், டி.பி.கே.எல்-லுக்கு 15 லட்சம் ரிங்கிட் கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்கு போக்குவரத்து அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.

கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பல இடங்களில் முறையான பேருந்து நிறுத்தங்கள் இல்லாதது குறித்து பொதுப் போக்குவரத்துப் பயணிகள் அளித்த புகார்களைத் தொடர்ந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

''நகரவாசிகள் மற்றும் பொதுப் போக்குவரத்துப் பயணிகளிடமிருந்து நாங்கள் அடிக்கடி பெறும் புகார்களில் இதுவும் ஒன்று. சில நேரங்களில் நாங்கள் சாலையோரத்தில் உள்ள பேருந்தில் ஏற வேண்டியுள்ளது. அங்கு முறையான பேருந்து நிலையம் இல்லை. அங்கு இடமில்லை. அங்கு அடையாளப் பலகைகள் இல்லை. எனவே, இந்தப் பேருந்து நிறுத்தங்களை நாங்கள் மேம்படுத்த விரும்புகிறோம். ஆகவே, நாங்கள் அவற்றை மேம்படுத்தவும், புதியவற்றை உருவாக்கவும் விரும்புகிறோம்'', என்றார் அவர்.

ஒரு பேருந்து நிறுத்தத்தின் கட்டுமானச் செலவு 15,000-இல் இருந்து 30,000 ரிங்கிட் வரை மதிப்பிடப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த ஒதுக்கீட்டின் மூலம் ஏறத்தாழ 100 பேருந்து நிறுத்தங்களைக் கட்டவோ அல்லது மேம்படுத்தவோ முடியும் என்று அந்தோணி லோக் கூறினார்.

பினாங்கு அமலாக்கத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் இதேத் திட்டத்தை போக்குவரத்து அமைச்சு முன்னதாக அம்மாநிலத்தில் மேற்கொண்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)