சுங்கை பட்டாணி, 16 ஜூன் (பெர்னாமா) -- கெடா, சுங்கை பட்டாணியில் கடந்த ஜூன் 11-ஆம் தேதி அம்மாநில கபடிக் கழகத்தின் ஏற்பாட்டில் கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கான கபடிப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
26 தமிழ்ப்பள்ளிகள் கலந்துகொண்ட இப்போட்டியில், தனது அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்தி ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.
சுங்கை பட்டாணியில் அமைந்துள்ள வில்லேஜ் மால் பேரங்காடியில் காலை மணி 9 தொடங்கி மாலை மணி 7 வரை இப்போட்டி நடைபெற்றது.
கடந்த ஜனவரி மாதம் முதலே கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் தங்கள் விறுவிறுப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர்.
ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, பத்து பெக்காக்க (Batu Pekaka) தமிழ்ப்பள்ளி, கலைவாணி தமிழ்ப்பள்ளி, சரஸ்வதி தமிழ்ப்பள்ளி ஆகிய தமிழ்ப்பள்ளிகளும் இதில் கலந்துகொண்டன.
இந்நிலையில், இறுதிப் போட்டியில் ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி அணியுடன் மோதிய பத்து பெக்காக்க மகளிர் அணி, கடுமையான போட்டிக்குப் பிறகு 30–32 என்ற புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
தமிழ்ப்பள்ளிகளின் விளையாட்டுத் திறன், ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இக்கபடி போட்டி அமைந்துள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]