Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

உயர்ந்த நிலை சமூகத்தின் பின்னால் ஆசான்களும் தூண்களே

17/05/2026 01:38 PM

கிள்ளான், 17 மே (பெர்னாமா) -- மானிட சமுதாயத்தின் அறிவாக இருக்கும் ஆசான்கள் ஒவ்வொரு நாளும் போற்றப்பட வேண்டியவர்கள் என்றாலும், அவர்களின் தியாகத்திற்கும் சமூக பங்களிப்பிற்கும் நன்றி மலர்களைச் சமர்ப்பிக்க வேண்டிய சிறப்பு நாள் மே 16. 

கல்வி எனும் உலகின் மிக உயரிய சொத்தை மாணவர்களுக்கு அளிக்கும் ஆசிரியர்களை பெர்னாமா செய்திகளும் கொண்டாடுடியது.  

ஒவ்வொருவரின் வாழ்க்கையில் தாய், தந்தைக்குப் பிறகு ஆசிரியர்களே மிக முக்கியமானவர்கள். 

அந்த வகையில், ஒருவருக்கான கல்வி எனும் அடிப்படை உரிமையை கற்பிப்பதோடு, குணநலன்களையும் ஒழுக்கத்தையும் அவர்களின் வாழ்க்கையில் வளம் அடைய கற்பிப்பவர்கள் ஆசிரியர்களே. 

சமூகத்தில் அனைவரும் சமம் என்பதைக் கல்வியின் மூலம் உணர்த்துவதோடு, பகுத்தறிவு, திறன் வளர்ச்சி ஆகியவற்றையும் மேம்படுத்துபவர்கள் ஆசிரியர்கள். 

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற ஒளவையாரின் வரிகளுக்கு ஏற்ப மாணவர்களுக்கு கற்பித்து, வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கி நகர வைக்கும் ஆசிரியர்களை தலைவணங்குவோம். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]