ஷா ஆலம், 20 மே (பெர்னாமா) -- இன்று அதிகாலை ஷா ஆலம், செக்ஷன் 14, விஸ்தா அலாம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திலிருந்து தவறி விழுந்ததாக நம்பப்படும், சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து பின்னிரவு மணி 3.07-க்கு, ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையக கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்ததாக, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் உறுதிப்படுத்தினார்.
சம்பவ இடத்திலேயே அந்த மூத்த அதிகாரி உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
பிரேதப் பரிசோதனையின் முடிவு கிடைக்கும் வரை, திடீர் மரணமாகவும் இது கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்ட டத்தோ ஷசெலி, விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எவ்வித அனுமானத்தையும் பரப்ப வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)