Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணம்; கவலையை எதிர்கொண்டுள்ள பிஎஸ்ஜி

27/05/2026 05:26 PM

பாரிஸ், 27 மே (பெர்னாமா) --  ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னதாக பிரான்சின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மயின், பி.எஸ்.ஜி அணி மிகுந்த கவலையை எதிர்கொண்டுள்ளது.

அவர்களின் இரண்டு முக்கிய நட்சத்திர வீரர்கள் ஆட்டத்தில் களமிறங்குவதற்கு இன்னும் முழுமையான உடல்நலத் தகுதிக்குத் திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை புடாபெஸ்டில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான பி.எஸ்.ஜி, இங்கிலாந்து லீக் வெற்றியாளரான ஆர்சனலை எதிர்கொள்வதால் இந்த இறுதிப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் லீக் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் உள்ள பி.எஸ்.ஜி, கடந்த வாரம் இங்கிலாந்து பிரீமியர் லீக் ஈ.பி.எல் பட்டத்தை வென்று 22 ஆண்டு கால வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்சனலை எதிர்கொள்வதில் மிகவும் கவனமுடன் இருக்கின்றது.

தற்போதைய நிலையில் ஐரோப்பாவின் மிகச்சிறந்த இரண்டு அணிகள் மோதும் போட்டியாக இது கருதப்படுகிறது.

ஆனால் புஸ்காஸ் அரங்கில் பி.எஸ்.ஜி தனது முழு பலத்துடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

பி.எஸ்.ஜி அஷ்ரஃப் ஹகிமி மற்றும் உஸ்மான் டெம்பலே ஆட்டக்காரர்கள் இருவரும் காயம் காரணமாக இன்னும் முழுமையான உடல்நலத்திற்கு திரும்பாத நிலையில், அது அவ்வணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என கூறப்படுகிறது.

இருப்பினும், இறுதிப் போட்டிக்கு முன்னர் அவர்கள் குணமடைந்து பயிற்சியில் ஈடுபட வேன்டும் என அதன் நிவாகி மிகவும் எதிர்பாக்கின்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)