ஜோகூர்பாரு, ஜூன் 02 (பெர்னாமா) -- ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு தொகுதி ஒதுக்கீடு குறிப்பாக 80 விழுக்காட்டு தொகுதிகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் பேச்சுவார்த்தைகளும் நிறைவு பெறும் கட்டத்தில் உள்ளன.
எஞ்சியுள்ள 20 விழுக்காடு தொகுதிகள் மூடா, மலேசிய இந்திய மக்கள் கட்சி MIPP, மற்றும் Ikatan Prihatin Rakyat IPR ஆகிய கட்சிகளை உட்படுத்தி இன்னும் விவாதத்தில் உள்ளதாக ஜோகூர் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சாஹ்ருடின் ஜமால் தெரிவித்தார்.
அனைத்து 56 தொகுதிகளிலும் பெரிக்காத்தான் போட்டியிடுவதாகவும் தேர்தல் பிரச்சாரத்தில் பெர்சத்து, பாஸ், கெராக்கான், MIPP ஆகிய நான்கு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அது தனது செயல்பாட்டைத் தொடரும் எனவும் பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
இதனிடையே, புத்ரி வங்சா தொகுதியை தொடர்ந்து தக்க வைத்து கொள்வதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மூடா கட்சி, அதன் பொருட்டு அதிகமான இளம் வேட்பாளர்களையும் அங்கு நிறுத்தப் போவதாகவும் தெரிவித்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)